Friday, August 13, 2010

ஐயோ இது ஐம்பதாவது பதிவல்ல!!

thank you Pictures, Images and Photos

ஐம்பதாவது பதிவல்ல இது
ஐம்பது நெஞ்சங்களின் இணைவு!
இப்பூங்கொத்தில் ஒவ்வொரு மலரும்
என் கிறுக்கலுக்கு
மதிப்பளித்த
உள்ளங்களின் இணைவு!
எந்தன் புனைவுகளுக்கு
உங்கள் இணைவுகள் தான்
அங்கீகாரங்கள்..
நீற்று பட்டைக்கு
பொட்டு வைத்த உன்னத
விரல்கள் நீங்கள்!

எலெக்ஷன்'னுக்கு கூட
ஒட்டு போடாமல்
எந்தன் பதிவுகளுக்கு ஒட்டு போட்ட
ஜனநாயக செம்மல்கள்!
(சத்தியமா உண்மை இல்லைங்க..ஒரு கிக்'ஆ இருக்கட்டுமேன்னு தாங்க!)
நான் உண்ணாமல் இருப்பேன்
என அறிந்து மறக்காமல்
பின்னூட்டல் தந்த வள்ளல்கள் நீங்கள்!!
(நாளுக்கு 5 வேளை உண்பது
நம்ம பப்ளிக்'கு தெரியாதே!)
thankyou Pictures, Images and Photos
எப்போதும் உங்கள் உறவு
கேட்டிடும் எந்தன் மனது
நீங்காமல் எந்தன் ப்ளாக் இல்
தினசரி நீ வந்து தான் உலாவு!

ஐம்பது பொலோவர் தானே
பார்ட்டி ஒன்னு போடு நீயே
அப்பிடீன்னு கேட்டு நீங்கள்
ஏமாந்திட வேண்டாம் தானே!!

டிஸ்கி:இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு என் தொலை(தொல்லை)பேசி இயக்கத்திலிருக்காது என்பதை மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களே!!!

என்ன செய்யுற,பயபுள்ள சிக்குறான் இல்லையே,சிக்கட்டும் எப்படியும் ஒரு நாள் மாட்டுவான் தானே என்ன சொல்றீங்க!!!
வாற கோபத்தை எல்லாம் இன்ட்லிலையும் தமிழ்மணத்திலும் குத்தி தீர்த்துக்கொள்ளுங்கள்!

8 comments:

  1. ஐம்பதாவது பதிவல்ல இது
    ஐம்பது நெஞ்சங்களின் இணைவு!//

    வாழ்த்துக்கள்...தொடருங்கள்!!

    //என்ன செய்யுற,பயபுள்ள சிக்குறான் இல்லையே,சிக்கட்டும் எப்படியும் ஒரு நாள் மாட்டுவான் தானே என்ன சொல்றீங்க!!!//
    ஆனா சிக்காமலா போய்டுவீங்க??பாப்பம்

    ReplyDelete
  2. எலெக்ஷன்'னுக்கு கூட
    ஒட்டு போடாமல்
    எந்தன் பதிவுகளுக்கு ஒட்டு போட்ட
    ஜனநாயக செம்மல்கள்!//
    :)

    //நாளுக்கு 5 வேளை உண்பது
    நம்ம பப்ளிக்'கு தெரியாதே//
    அடப் பாவி..

    ஆனால் ரசித்தேன் குறும்பை ;)

    ReplyDelete
  3. Anonymous said...
    ஆனா சிக்காமலா போய்டுவீங்க??பாப்பம்//
    ஆகா நெசமாவே கொல வெறியோட தான் இருக்கீங்களா??

    ReplyDelete
  4. LOSHAN said...
    ஆனால் ரசித்தேன் குறும்பை ;)//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா!

    ReplyDelete
  5. அட அட அட என்ன அருமையா சொல்லியிருக்கீங்க...

    ஐம்பது ஐநூறாக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வெறும்பய said...

    அட அட அட என்ன அருமையா சொல்லியிருக்கீங்க...

    ஐம்பது ஐநூறாக வாழ்த்துக்கள்...//

    நன்றி தல..500 ஆனா உங்களுக்கு ஒரு ஸ்பெசல் பார்ட்டி வைக்கிறன்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் உங்கள் அடைவுக்கு(achievement!)...
    லோஷன் அண்ணாவின் பின்னூட்டம் பெற்றது உங்களுக்கான ஒரு சிறப்பு அங்கீகாரம் நண்பா...
    தொடரட்டும் உங்கள் கவிப்பணி...

    ReplyDelete
  8. Raventhiraraja said...

    வாழ்த்துக்கள் உங்கள் அடைவுக்கு(achievement!)...
    லோஷன் அண்ணாவின் பின்னூட்டம் பெற்றது உங்களுக்கான ஒரு சிறப்பு அங்கீகாரம் நண்பா...
    தொடரட்டும் உங்கள் கவிப்பணி...//

    உண்மைதான் அனுஷ்,நன்றி.

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!